“உண்ட வீட்டுக்கே ரெண்டகம் பண்ணுறீங்களே” தவெகவுடன் திமுக MLA-க்கள் செட்டிங்..? உளவுத்துறை கொடுத்த பகீர் ரிப்போர்ட்… கொந்தளித்த உதயநிதி ஸ்டாலின்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“உண்ட வீட்டுக்கே ரெண்டகம் பண்ணுறீங்களே” தவெகவுடன் திமுக MLA-க்கள் செட்டிங்..? உளவுத்துறை கொடுத்த பகீர் ரிப்போர்ட்… கொந்தளித்த உதயநிதி ஸ்டாலின்..!!

Published

on

தமிழகச் சட்டமன்றப் பேரவையில் ஆளுங்கட்சியான திமுகவின் செயல்பாடுகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்குத் தீவிர சந்தேகம் எழுந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியான தமிழக வெற்றித் கழகத்துடன் சொந்தக் கட்சி எம்.எல்.ஏ-க்களே ரகசியமாகச் ‘செட்டிங்’ அல்லது உடன்பாட்டில் இருக்கிறார்களோ என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தவெகவை வீரியமாக எதிர்க்காமல் மெத்தனமாகச் செயல்படும் திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் போக்கால் இந்தச் சந்தேகம் வலுத்துள்ளது.

அவையில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு அழுத்தமான பதிலடி கொடுப்பதற்குப் பதிலாக, அமைச்சர்கள் வசந்தம் கார்த்திகேயன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் ரகுபதி உள்ளிட்டோர் அடிக்கும் கமெண்ட்டுகள் அவையை வெறும் சிரிப்பலையில் ஆழ்த்தி, இறுதியில் சமூக வலைத்தளங்களில் ‘ட்ரோல் மெட்டீரியலாக’ மாறிப் போவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சட்டமன்றத்தில் அதிமுக, பாமக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ-க்கள் முன்வைக்கும் கடுமையான கிடுக்கிப்பிடி விமர்சனங்களைக் கூட, ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களால் சரியாக எதிர்கொள்ள முடியாமல் திணறி வருவதாகக் கூறப்படுகிறது.

Advertisement

சொந்தக் கட்சி எம்.எல்.ஏ-க்களின் இந்த மந்தமான போக்காலும், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் போதிய விவாதம் செய்யாமல் நகைச்சுவை செய்து கடந்துபோகும் அணுகுமுறையாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அவர்கள் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தவெகவை அரசியல் ரீதியாக வலிமையாகச் சமாளிக்க வேண்டிய களத்தில் சொந்தக் கட்சி எம்.எல்.ஏ-க்களே சுணக்கம் காட்டுவது, திமுக தலைமைக்கு இடையே பெரும் கவலையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in