LATEST NEWS
அடேங்கப்பா..! ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் ரூ.1 லட்சம் கோடி.. தவெக அரசின் அதிரடி சாதனையால் குதூகலத்தில் இளைஞர்கள்.. தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அதிரடிப் பாய்ச்சல்..!!
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று முதல் 100 நாட்களுக்குள் வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளன. இதன் ஒரு பகுதியாகச் சென்னையில் இன்று கோலாகலமாக நடைபெற்றுவரும் மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில், ரூ.67,452 கோடி மதிப்பிலான 97 புதிய தொழில் ஒப்பந்தங்கள் வெற்றிகரமாகக் கையெழுத்தாகவுள்ளன.
ஏற்கனவே கையெழுத்தான ஒப்பந்தங்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 104 திட்டங்கள் மூலமாக ரூ.1,02,514 கோடி முதலீடு தமிழகத்திற்குள் வந்துள்ளதுடன், இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு 1,21,788 புதிய வேலைவாய்ப்புகள் உறுதியாகியுள்ளன. புதிய அரசின் இந்த அதிரடித் தொழில் வளர்ச்சியும், குறுகிய காலத்தில் ஈர்க்கப்பட்டுள்ள அமோக முதலீடுகளும் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
