அமெரிக்காவிற்கு பேரதிர்ச்சி..! “டிரம்ப் பதவியை விட்டுப் போற வரைக்கும் நாங்க விடமாட்டோம்…”  ஈரான் கொடுத்த மெகா மிரட்டல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அமெரிக்காவிற்கு பேரதிர்ச்சி..! “டிரம்ப் பதவியை விட்டுப் போற வரைக்கும் நாங்க விடமாட்டோம்…”  ஈரான் கொடுத்த மெகா மிரட்டல்..!!

Published

on

வரும் 2029 உடன் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பதவிக்காலம் முடிகிறது. அதுவரை அமெரிக்காவுடனான போரை நீட்டிக்க உள்ளதாக ஈரான் புரட்சிகரக் காவல் படை தலைமைத் தளபதியின் மூத்த ஆலோசகரான முகமது ரேசா நக்தி தெரிவித்துள்ளார்.

பிபிஎஸ் ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில் “எதிரி மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அஞ்சும் நிலையை உருவாக்குவதே எங்களின் முதன்மை இலக்கு. இதற்கான ஒரு வழி, இந்தப் போரை டிரம்ப்பின் அதிபர் பதவிக்காலம் முடியும் வரை நீட்டித்து, அவர்களுக்குப் பெரும் இழப்புகளை ஏற்படுத்துவதாகும். இதன் மூலம் எதிர்காலத்தில் ஈரான் மீது தாக்குதல் நடத்த நினைக்கும் எவரும் அதற்குப் பெரும் விலை கொடுக்க நேரிடும் என்பதைப் புரிந்துகொள்வார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement

அமெரிக்க ராணுவம் தாங்கள் முன்பு நினைத்ததை விடப் பலவீனமாக இருப்பதை இந்தப் போரின் மூலம் ஈரான் அறிந்துகொண்டதாக அவர் தெரிவித்தார். ஈரான் அதிக எண்ணிக்கையில் ஏவுகணைகளை உற்பத்தி செய்து வருவதாகவும் “ஒருவேளை ஈரானிடம் ஏவுகணைகள் தீர்ந்துபோகும் நிலை வந்தாலும், அன்றைய தினம் அமெரிக்காவுக்கு நாங்கள் இன்னும் ஆபத்தானவர்களாக மாறுவோம். ஏனெனில், உலகம் முழுவதும் அமெரிக்காவிற்கு ஆயிரக்கணக்கில் பொருளாதார நலன்கள் உள்ளன. அவை அனைத்தையும் எளிதில் அழிக்க முடியும்” என எச்சரித்தார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in