LATEST NEWS
வேடிக்கை பார்க்கக்கூடாது.. அடுத்த 15 நாட்களுக்குள்… முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை…!!
“காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளபடி, அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு 7.7 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்துவிடுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்” என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடக அரசு தொடர்ந்து மதிக்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “கர்நாடக காங்கிரஸ் அரசால் தமிழக விவசாயிகள் மீண்டும் ஒருமுறை வஞ்சிக்கப்படுவதை முதலமைச்சர் ஜோசப் விஜய் வேடிக்கை பார்க்கக் கூடாது” எனவும் நயினார் நாகேந்திரன் எச்சரித்துள்ளார். தமிழக மக்களின் வாழ்வாதார உரிமைகளைத் தக்கவைக்க, ஆளும் அரசு உடனடியாக உறுதியான மற்றும் கடுமையான சட்டப் பூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்குத் தேவையான தண்ணீரைத் தடையின்றிப் பெறுவது தமிழக அரசின் முதன்மையான கடமையாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்டை மாநில அரசுடன் சுமுகமான அல்லது சட்டப்பூர்வமான அழுத்தங்களைச் செலுத்தி, தமிழகத்திற்குச் சேர வேண்டிய தண்ணீரைத் தாமதமின்றிப் பெற்றுத்தர முதலமைச்சர் உடனடியாகச் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
