LATEST NEWS
BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.. தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு.!!
நாளை மறுநாள் ஆகஸ்ட் 15 சுதந்திரத் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும் மூடப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், தடையை மீறி கடைகளையோ அல்லது பார்களையோ திறக்கக் கூடாது என்று கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், விதிமுறைகளை மீறி கள்ளச்சந்தையில் மது பாட்டில்களைப் பதுக்கி வைத்தோ அல்லது கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வழக்கமாக குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, திருவள்ளுவர் தினம் போன்ற மிக முக்கியமான ஆண்டுக்கு 8 நாள்கள் மட்டுமே டாஸ்மாக் கடைகளுக்கு முழு விடுமுறை அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதனால் மதுப்பிரியர்கள் முன்கூட்டியே தங்களுக்குத் தேவையான மதுபானங்களை வாங்கிச் சேமிக்கத் தொடங்கியுள்ளனர். அதே வேளையில், விடுமுறை நாளில் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெறுவதைத் தடுக்க மாநிலம் முழுவதும் ஆங்காங்கே பறக்கும் படையினர் மூலமாகத் தீவிரக் கண்காணிப்புப் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
