CRIME
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி.. குடும்பத்தாரை ஏமாற்றி 7 நாட்கள் நடத்திய நாடகம்.. கடைசியில் சிக்கிய மொபைல் போன்.. போலீஸாரையே அதிரவைத்த பின்னணி..!!
ஹரியானாவில் 21 வயதான மோனு என்ற வாலிபர் மாயமானதாகப் புகார் அளிக்கப்பட்ட நிலையில், ஜூன் 10 அன்று கால்வாயில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டது. கால்வாய் கரையில் இருந்த அவரது ஸ்கூட்டரையும், அதற்குள் இருந்த மொபைல் போனையும் போலீஸார் மீட்டனர். இதுகுறித்து மோனுவின் மனைவி தனுவிடம் விசாரித்தபோது, தனக்கு எதுவும் தெரியாது என்றும், கணவருடன் தான் பேசவே இல்லை என்றும் கூறியுள்ளார். இதனால், மோனு குளிக்கும்போது நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் அல்லது தற்கொலை செய்திருக்கலாம் என முடிவு செய்து போலீஸார் வழக்கை அப்படியே முடித்துவிட்டனர். கணவனின் மரணத்தால் நிலைகுலைந்து போனது போல் நடித்த தனு, அழுதுகொண்டே இறுதிச் சடங்குகளில் பங்கேற்றதுடன், 7 நாட்களும் குடும்பத்தினருடன் இருந்து காரிய சடங்குகளை முன்னின்று நடத்தி அனைவரின் அனுதாபத்தையும் பெற்றார்.
ஆனால், ஸ்கூட்டரில் மீட்கப்பட்ட மொபைல் போன் இந்த வழக்கின் போக்கையே தலைகீழாக மாற்றியது. மோனுவின் மொபைலில் இருந்த அனைத்து சாட்டிங் தரவுகளும் அழிக்கப்பட்டிருந்ததைக் கண்ட குடும்பத்தினர், நிபுணர்களின் உதவியோடு தரவுகளை மீட்டெடுத்தனர். அதில், மோனு தனது மனைவி தனுவிற்கு 49 முறை கால் செய்திருப்பதும், ஆனால் மொத்தமாக ஒரு நிமிடம் மட்டுமே அவர்கள் பேசியிருப்பதும் அம்பலமானது. இந்த ஆதாரத்தின் அடிப்படையில் போலீஸார் தனுவிடம் நடத்திய மறுவிசாரணையில், அவருக்கு வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பு இருந்ததும், தனது கள்ளக்காதலனின் உதவியோடு கணவன் மோனுவைக் திட்டமிட்டு கொலை செய்துவிட்டு, நாடகமாடிய அதிர்ச்சி உண்மையும் வெளிச்சத்திற்கு வந்தது.
