கடைசியாகப் பேசிய அந்த 3 எண்கள் யார்..? திருப்பூர் ஆயுதப்படை பெண் காவலர் தற்கொலை வழக்கில் அடுத்தடுத்து வெளிவரும் திடுக் தகவல்கள்..!! – cinefeeds
Connect with us

CRIME

கடைசியாகப் பேசிய அந்த 3 எண்கள் யார்..? திருப்பூர் ஆயுதப்படை பெண் காவலர் தற்கொலை வழக்கில் அடுத்தடுத்து வெளிவரும் திடுக் தகவல்கள்..!!

Published

on

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதான ரஞ்சனி என்ற பெண் காவலர், திருப்பூர் ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், அவர் நேற்று காலை திடீரெனத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்துப் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பெண் காவலர் ரஞ்சனிக்கும் ஓர் ஆண் காவலருக்கும் இடையே காதல் இருந்து வந்ததும், இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்ததும் தெரியவந்துள்ளது. இந்தச் சூழலில், திருமணமான மற்றொரு போலீஸ்காரருடன் ரஞ்சனி தொலைபேசியில் பேசியது அவருடைய காதலனுக்குத் தெரியவந்துள்ளது.

Advertisement

இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும் கருத்து வேறுபாடும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த மன உளைச்சல் காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கப்பட்டுள்ளது. தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக ரஞ்சனி கடைசியாகப் பேசிய 3 தொலைபேசி எண்களைக் கண்டறிந்துள்ள போலீசார், அந்த எண்களை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in