“என் சாவுக்கு எந்தப் பெண்ணும் காரணமில்ல” என் அம்மா கூட என்ன நம்பல… கடைசி வீடியோவில் உண்மையை உடைத்துவிட்டு.. லைவ்வில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட 28 வயது இளைஞர்..!! – cinefeeds
Connect with us

CRIME

“என் சாவுக்கு எந்தப் பெண்ணும் காரணமில்ல” என் அம்மா கூட என்ன நம்பல… கடைசி வீடியோவில் உண்மையை உடைத்துவிட்டு.. லைவ்வில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட 28 வயது இளைஞர்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் பஹேடி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், சமூக வலைதளத்தில் இறுதிச் செய்தியைப் பகிர்ந்துவிட்டு நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நவயல் கிராமத்தைச் சேர்ந்த 38 வயதான ராஜீவ் கங்கவார் என்ற நபர், கடந்த வியாழக்கிழமை மதியம் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரு உணர்ச்சிபூர்வமான வீடியோவைப் பதிவேற்றியுள்ளார்.

அந்த வீடியோவில் தனது குடும்பத்தினர் மற்றும் தாயின் மீதான ஆதங்கத்தை வெளிப்படுத்திய ராஜீவ், தனது தாய்க்கு தன் மீது துளிக்கூட நம்பிக்கை இல்லை என்றும், யாரும் தன்னை புரிந்து கொள்ளவில்லை என்றும் கண்ணீருடன் தெரிவித்தார். இந்த தீவிர மன உளைச்சலுக்கும் எந்தவொரு காதல் விவகாரத்திற்கும் தொடர்பில்லை என்றும், முழுக்க முழுக்க குடும்பச் சூழலே காரணம் என்றும் அவர் விளக்கினார். மேலும், தான் எங்கு விஷம் குடிக்கப் போகிறேன் என்பதையும், தனது உடல் நைனிதால் நெடுஞ்சாலையில் முடியா டோல் பிளாசாவுக்கு அருகில் கிடைக்கும் என்பதையும் அவர் அந்த வீடியோவில் முன்பே குறிப்பிட்டிருந்தது அனைவரையும் உலுக்கியது.

Advertisement

வீடியோவை வெளியிட்டவுடன் நைனிதால் நெடுஞ்சாலைக்குச் சென்ற ராஜீவ், அங்கே விஷம் அருந்திய நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். நெடுஞ்சாலை ஓரத்தில் உடல் கிடப்பதைப் பார்த்த கிராமத்தினரும் வழிப்போக்கர்களும் உடனடியாக பஹேடி காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், ராஜீவ்வின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவரது கைப்பேசி பதிவுகள், இன்ஸ்டாகிராம் வீடியோ மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி காவல்துறையினர் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in