3 நாள் பட்டினி….! உடம்புல ஒட்டு துணி கூட இல்லாம… மனுஷன் உசுர கொடுத்து நடிச்சுருக்காரு போலயே…!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

3 நாள் பட்டினி….! உடம்புல ஒட்டு துணி கூட இல்லாம… மனுஷன் உசுர கொடுத்து நடிச்சுருக்காரு போலயே…!!!

Published

on

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் ஆடு ஜீவிதம். இந்த திரைப்படத்தில் பிரித்திவிராஜ் நடித்தது குறித்து ஒளிப்பதிவாளர் சில தகவல்களை கூறி இருக்கின்றார். திரையரங்குகளில் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய திரைப்படம் ஆடு ஜீவிதம் . நீண்ட எதிர்பார்ப்புக்கு பின்னர் வெளியான இந்து திரைப்படம் ரசிகர்களின் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

#image_title

இந்த திரைப்படத்தை பிளஸ்சி இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்திற்கு சுனில் கே எஸ் ஒளிப்பதிவு செய்திருந்தார். பிரித்திவிராஜ் உயிரைக் கொடுத்து நடித்திருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அனைவரும் கலங்கி போய் இப்படத்தை பாராட்டி வருகிறார்கள். பென்யமின் என்பவர் எழுதிய நாவலைத் தலைவி எடுக்கப்பட்ட திரைப்படம் தான் ஆடு ஜீவிதம்.

#image_title

இந்த திரைப்படத்தில் பிரித்திவிராஜ் நசீப் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் ஒரு காட்சி படமாக்கப்பட்டது குறித்து ஒளிப்பதிவாளர் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருந்ததாவது இந்த திரைப்படத்தில் நசீப் ஆடைகளை எல்லாம் கலைத்துவிட்டு தண்ணீர் முன்பு போய் நிற்பது போன்று ஒரு காட்சி படம் ஆக்கப்பட்டது.

அந்த காட்சியை படமாக்க எல்லாம் சரியாக திட்டமிட்டபடி எடுத்தோம். இதற்காக சுமார் மூன்று நாட்கள் 72 மணி நேரம் உணவு அருந்தாமல் பிரித்திவிராஜ் இருந்திருந்தார். பல மடங்கு உடல் எடையை குறைத்து இருந்த பிரித்திவிராஜ் தண்ணீர் கூட குடிக்கவில்லை, அந்த சீனுக்காக உடம்பில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் அவர் நடித்தார். இப்படி உயிரை கொடுத்து நடித்து இருக்கிறார் பிரித்திவிராஜ் என பாராட்டி பேசி இருந்தார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in