LATEST NEWS
இது என்னோட 25 வருட உழைப்பு…. சொகுசு கார் வாங்கிய அர்ச்சனா… விலையை கேட்டா ஆடிப் போயிடுவீங்க?..!!

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வருபவர் வி ஜே அர்ச்சனா. இவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. முதலில் ரோடியோ சேனலில் ஆர் ஜே வாக தனது வாழ்க்கையை தொடங்கிய இவர் பின்னர் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தற்போது விஜே மற்றும் ஆர்ஜே-வாக பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இவர் தொகுப்பாளியாக மட்டும் இல்லாமல் ஒரு சில திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

#image_title
அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படத்தில் இவரும் இவரது மகள் சாராவும் நடித்திருப்பார்கள். இந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய அர்ச்சனா யூட்யூப் சேனல் ஒன்றை வைத்து இருக்கின்றார். அதில் தனது வீட்டில் நடக்கும் பல விஷயங்களை பகிர்ந்து கொள்வார். இவரது மகளும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் youtube பக்கத்திலும் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.

#image_title
இந்நிலையில் தொகுப்பாளியை அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சொகுசு கார் வாங்கிய வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவில் அர்ச்சனா மற்றும் அவருடைய மகள் தங்கை என மொத்த குடும்பத்துடன் சொகுசு கார் வாங்கி, கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர். அர்ச்சனா வாங்கி இருக்கும் காரின் விலை சுமார் 75 லட்சம், இந்த காரை வாங்குவதற்கு அவர் 25 வருடம் கஷ்டப்பட்டு உழைத்தேன் என்று கண்ணீர் விட்டு பேசியிருந்தார், இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.