CINEMA
சூப்பர் ஸ்டாரை வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்த தல அஜித்… விடாமுயற்சி படத்தில் கூட்டணியா?… வெளியான புகைப்படம்..!!

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக கொண்டாடப்படுபவர் தான் நடிகர் அஜித். இவர் வெறும் நடிகராக மட்டுமல்லாமல் துப்பாக்கி சுடுதல் மற்றும் பைக் ரேஸ் சொல்லிட்டா பல விளையாட்டு தொடர்பான செயல்களிலும் அதிக ஆர்வம் கொண்டவர். அடிக்கடி தனது பைக்கில் சுற்றுலா என்ற பெயரை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வளம் வந்து கொண்டிருக்கிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்காக தயாராகி வருகிறார்.
மகிழ் திருமேனி இந்த திரைப்படத்தை இயக்க உள்ள நிலையில் அனிருத் இசை அமைக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.இதனைத் தொடர்ந்து விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் மற்றும் அர்ஜுன் தாஸ் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
விடாமுயற்சியின் முதல் கட்ட படப்பிடிப்பு துபாயில் நடைபெறும் என ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் தற்போது அதற்காக அஜித் துபாய் சென்றுள்ளார். இந்த நிலையில் துபாயில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நேரில் அவருடைய வீட்டிற்குச் சென்று அஜித் சந்தித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் மோகன்லால் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடிக்க உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இருந்தாலும் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.