நல்ல வேளை அனகோண்டாவுக்கு ஒன்னும் ஆகல… முதல்முறையாக மனம்திறந்த விஷால்.. வைரல் வீடியோ..!!! - Cinefeeds
Connect with us

VIDEOS

நல்ல வேளை அனகோண்டாவுக்கு ஒன்னும் ஆகல… முதல்முறையாக மனம்திறந்த விஷால்.. வைரல் வீடியோ..!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஷால். செல்லமே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த இவர் தற்போது முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இவர் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சமீபத்தில்  வெளியாகி உள்ள நிலையில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா இரண்டு வேடங்களில் நடித்துள்ளனர்.

ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கும் இந்த திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதாவது சயின்ஸ் பிக்சன் மற்றும் டைம் ட்ராவல் கதையை இந்த படம் கொண்டுள்ளது. சுனில், செல்வராகவன் மற்றும் அபிநயா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் தமிழக மட்டுமல்லாமல் உலக அளவில் வசூல் வேட்டை நடத்திவரும் நிலையில் விஷாலின் கேரியரில் மார்க் ஆண்டனி திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் மார்த்தாண்டனை திரைப்படத்தில் இடம்பெற்ற ஐ லவ் யூ டி என்ற பாடல் கொஞ்சம் ஆபாசமாக இருந்தது. அது மட்டுமல்லாமல் அந்த பாடலின் கடைசியில் நல்லவேளை அனகோண்டாவுக்கு ஒன்னும் ஆகலை என்று விஷால் கூறியிருப்பார். அது இணையத்தில் பயங்கர சர்ச்சையை கிளப்பி வரும் நிலையில் தற்போது இது தொடர்பாக விஷால் சமீபத்தில் பிரபல சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Galatta Media இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@galattadotcom)