CINEMA
லியோ திரைப்படத்திற்கு இப்படி ஒரு சிக்கலா?.. அதுவும் தமிழகத்திலா?.. ஷாக்கான ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாக்கியுள்ளது. இந்த திரைப்படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் அதிக அளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
லியோ திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இதுவரை 434 கோடி வரை பிசினஸ் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் உலக அளவில் லியோ திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூல் செய்யும் என தகவல் வெளியானது. இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் முதல் நாள் தமிழக வசூல் கட்டாயம் அடிவாங்கும் என்று அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதாவது அரசு விதிமுறைகளின் படி லியோ திரைப்படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு தான் என ஏற்கனவே கூறப்பட்டாலும் தயாரிப்பாளர் அதிகாலை காட்சிக்கு அரசிடம் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. ஒருவேளை அதிகாலை காட்சி கிடைக்கவில்லை என்றால் லியோ திரைப்படத்தின் தமிழக வசூலில் முதல் நாள் கிட்டத்தட்ட 40% வரை அடி வாங்கும் என்று கூறப்படுகிறது.