LATEST NEWS
அசோக் செல்வனை மருமகனாக்கிய அருண்பாண்டியன்… கீர்த்தி பாண்டியன் திருமணத்தில் இப்படி ஒரு உண்மை இருக்கா?.. ரகசியத்தை உடைத்த முக்கிய பிரபலம்..!!

நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியனை சமீபத்தில் அசோக் செல்வன் மணம் முடித்தார். கீர்த்தி பாண்டியன் 2019 ஆம் ஆண்டு தும்பா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நிலையில் அதனைத் தொடர்ந்து அன்பிற்கினியால் படத்தில் நடித்து அடுத்ததாக கண்ணகி மற்றும் ப்ளூ ஸ்டார் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்த போது அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இடையே காதல் மலர்ந்த நிலையில் இவர்கள் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
அருண் பாண்டியனின் சொந்த ஊரான திருநெல்வேலி அருகே உள்ள இட்டேரி என்ற கிராமத்தில் அமைந்துள்ள பண்ணை வீட்டில் வெகு விமர்சையாக இவர்களின் திருமணம் நடைபெற்றது.இந்த நிலையில் சினிமா விமர்சனரான செயார் பாலு இவர்களின் திருமணம் பற்றி விமர்சித்துள்ளார். அதாவது இவர்கள் இருவரின் திருமணம் பற்றிய செய்தி வந்ததும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. அருண் பாண்டி எனக்கு சினிமா மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ளதால் இவர்களின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மிக எளிமையாக நடந்து முடிந்தது. அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இருவருமே நல்ல ஜோடி தான்.
அருண்பாண்டியன் சினிமாவில் நுழைவதற்கு முன்பே அவருடைய தந்தை ஒரு ராணுவ அதிகாரியாக இருந்தவர். தற்போது அருண்பாண்டியனிடம் 200 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளன. இப்படி ஒரு குடும்ப பின்னணியில் இருந்து வந்த கீர்த்தி பாண்டியன் அன்பிற்கினியால் திரைப்படத்தில் நடித்த போது பல விமர்சனங்கள் மற்றும் உருவ கேலிகளை சந்தித்தார். அசோக் செல்வமும் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பதால் அருண்பாண்டியன் மருமகனாக ஏற்றுக் கொள்கிறார் என்றால் அது நிச்சயம் பாராட்டக்கூடியது. அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் ஜோடி நன்றாக உள்ளது என்று செயார் பாலு ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்