LifeStyle
உங்கள் பற்கள் முத்துப் போல பிரகாசிக்க வேண்டுமா? வாழைப்பழ தோல் இருந்தால் மட்டும் போதுமே… உங்கள் பற்கள் அழகாக இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!
உங்கள் பற்கள் மஞ்சள் நிறமாக இருக்கிறதா? இனி கவலையே வேண்டாம். முகம் எவ்வளவு அழகாக இருந்தாலும் சிரிக்கும் போது பற்கள் மஞ்சள் நிறமாக இருந்தால் அது பலருக்கும் முக அழகை கெடுக்கிறது. காபி டீ அதிகமாக குடிப்பது, முறையற்ற பற்கள் பராமரிப்பு மற்றும் சில உணவுப் பழக்கங்களால் பற்களில் இந்த மஞ்சள் கறை ஏற்படுகிறது.
இனி இதற்காக கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. உங்கள் வீட்டிலேயே இருக்கும் எளிய பொருட்களைக் கொண்டு பற்களை முத்து போல பிரகாசமாக மாற்றி விடலாம்.
ஆலமரக்குச்சி அல்லது வேப்பங்குச்சி
கிராமப்புறங்களில் பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் வேப்பங்குச்சி அல்லது ஆலமரக் குச்சியை கொண்டு பற்களை துலக்கலாம். குச்சியை நுனிப் பகுதியை சிறிது மென்று பிரஷ் போல மாற்றி பற்களை தேய்க்க வேண்டும். இதில் உள்ள இயற்கை கிருமி நாசினிகள் பற்களின் மஞ்சள் தன்மையை போக்குவதோடு ஈறுகளையும் பலப்படுத்தும்.
துளசி இலை பேஸ்ட்
துளசி இலைகளை வெயிலில் காயவைத்து அரைத்து பொடியாக்கி அதனுடன் சிறிதளவு கடுகு எண்ணெய் கலக்க வேண்டும். இந்த கலவையை கொண்டு பற்களை விரல்களால் மெதுவாக தேய்த்து கழுவ வேண்டும். துளசி பற்களை மென்மையாக்குவதோடு வாய் துர்நாற்றத்தையும் முழுமையாக நீக்கும்.
வெதுவெதுப்பான உப்பு நீர்
தினமும் சாப்பிடுவதற்கு முன்பும் சாப்பிட்ட பிறகு வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பை கலந்து வாயை கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்வது பற்களின் கறை படியாமல் தடுக்கும்.
பிரஷ் மற்றும் கால அளவு
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை டூத் பிரஷை கண்டிப்பாக மாற்ற வேண்டும். பிரஷ் தேய்ந்த பிரஷ்கள் பற்களில் உள்ள கறைகளை நீக்காது. நன்றாக ஷாப்ட் ஆன பிரஷ் பயன்படுத்தினால் தவறில்லை. அதிகமாக பற்களை தேய்க்க கூடாது.
வாழைப்பழத் தோல்
நாம் வாழைப்பழத்தை சாப்பிட்ட பிறகு அதன் தோலை உடனே தூக்கி எறிய வேண்டாம். அந்த வாழைப்பழ தோலின் உட்பகுதியை கொண்டு 2 நிமிடங்களுக்கு மேல் பற்களை நன்றாக தேய்க்கவும் அதன் பிறகு 5 நிமிடங்கள் கழித்து பற்களை துலக்கலாம். வாழைப்பழத் தோலில் உள்ள பொட்டாசியம் மெக்னீசியம் மற்றும் மாங்கனிசு போன்ற தாதுக்கள் பற்களை வெண்மையாக்க உதவுகின்றன.
காபி டீ அல்லது குளிர்பானங்கள் குடித்த பிறகு உடனடியாக வாயை கொப்பளிக்கும் பழக்கத்தை பழகிக் கொள்ளுங்கள். தினமும் காலையில் எழுந்ததும் இரவில் தூங்குவதற்கு முன்பும் ஒரு முறை பற்களை துலக்குவது பற்களை ஆரோக்கியமாக பாதுகாக்கும். மேலும் பற்களில் மஞ்சள் கறை படியாமலும் தடுக்கும்.
