LifeStyle
இல்லத்தரசிகளே… இனிமேல் கிச்சனில் இந்த டிப்ஸ்சை கரெக்டா ஃபாலோ பண்ணுங்க, அப்புறம் நீங்க தான் உங்க வீட்டில் சமையல் ராணி!
அரிசியை களைந்த பிறகு இரண்டாவது நீரில் சேனைக்கிழங்கு சேப்பக்கிழங்கு போன்றவற்றை வேக வைத்தால் அவற்றின் அரிப்பு தன்மை குறையும்.
ஒரு ஸ்பூன் சட்னியை தட்டில் வைத்த போது தண்ணீர் பிரியாமல் கெட்டியாக இருந்தால் அதுவே சட்னியில் சரியான பதமாகும்.
உப்புமா செய்யும்போது சிறிதளவு புளித்த தயிர் சேர்த்தால் அதன் சுவை மேலும் சிறப்பாக இருக்கும்.
முருங்கை இலையை எண்ணெயில் பொரித்து அதனுடன் வருத்த சீரகம் பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து பொடியாக அரைத்து நெய் சாதத்துடன் கலந்து சாப்பிட்டால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
எலுமிச்சை சாதம் செய்யும் போது சிறிதளவு துருவிய மாங்காய் சேர்த்தால் வித்தியாசமான சுவை கிடைக்கும்.
அப்பத்திற்கு மாவு அரைக்கும் போது தேங்காய் வெல்லத்துடன் 4 துண்டு அண்ணாச்சி பழம் சேர்த்து அரைத்தால் அப்பம் மேலும் ருசியாக இருக்கும்.
வேகவைத்த கொண்டைக்கடலையுடன் வேக வைத்த உரித்த உருளைக்கிழங்கு மசாலா உப்பு எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி சேர்த்து சுண்டல் செய்தால் சுவை மிகுந்ததாக இருக்கும்.
ஆரஞ்சு தோலை சிறு துண்டுகளாக நறுக்கி வற்றல் குழம்பு கொதிக்கும் போது சேர்த்தால் குழம்பிற்கு தனித்துவமான மணமும் சுவையும் கிடைக்கும்.
