“அடச்சீ நீயெல்லாம் மனுஷனா..?” ஓடும் ரயிலில் கர்ப்பிணி மீது பயந்த ஆசாமி… இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்.. அலறி துடித்து ஓடிய கொடூரன்… நெஞ்சை பறவைக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடச்சீ நீயெல்லாம் மனுஷனா..?” ஓடும் ரயிலில் கர்ப்பிணி மீது பயந்த ஆசாமி… இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்.. அலறி துடித்து ஓடிய கொடூரன்… நெஞ்சை பறவைக்கும் சம்பவம்..!!

Published

on

தலைநகர் டெல்லியிலிருந்து அலிப்பூர்துவாருக்குச் சென்ற சிக்கிம் மகாநந்தா விரைவு ரயிலில், 20 வயதான பழங்குடியினக் கர்ப்பிணிப் பெண் கொடூரமாகப் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட பேரதிர்ச்சிச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது. டெல்லியிலுள்ள உறவினரின் இல்லத்திலிருந்து தனது சொந்த ஊருக்குத் திரும்பிய அப்பெண், கர்ப்பமாக இருந்ததன் காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட சிறப்புப் பெட்டியில் பயணித்துள்ளார். ரயில் ஹசிமாரா நிலையத்தைக் கடந்து சென்ற நிலையில், அந்தப் பெட்டியில் பயணம் செய்த சக பயணிகள் அனைவரும் அடுத்தடுத்து இறங்கிவிட்டதால், அப்பெண் மட்டும் தனியாகச் சிக்கித் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனைப் பயன்படுத்திக் கொண்ட அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கவுதம் மகதோ என்ற நபர், சிலிகுரி சந்திப்பில் ரயிலில் ஏறி அந்தப் பெட்டிக்குள் நுழைந்துள்ளார். தனியாக இருந்த கர்ப்பிணிப் பெண்ணைத் தாக்கி கொடூரமான முறையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்த பெட்டியில் இருந்த ரயில்வே மின்சாரப் பிரிவு ஊழியர்கள், உடனடியாக ‘ரயில் மதத்’ செயலி மூலம் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தனர். அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணும் தனது கணவருக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்த கொடூரத்தைக் கூறியுள்ளார்.

Advertisement

தகவல் அறிந்த ரயில்வே பாதுகாப்புப் படையினரும் அரசு ரயில்வே போலீசாரும் அலிப்பூர்துவார் சந்திப்பில் ரயிலைச் சூழ்ந்து, குற்றவாளி கவுதம் மகதோவைக் கையும் களவுமாகக் கைது செய்தனர். படுகாயமடைந்த கர்ப்பிணிப் பெண் சிகிச்சைக்காக அலிப்பூர்துவார் ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in