VIDEOS
ஆமா. நான் அந்த மாதிரி படம் பார்த்து அப்பா கிட்ட மாட்டிருக்கேன்… அப்பா என்ன செய்தார் தெரியுமா?… நடிகர் விஷால் ஓபன் டாக்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஷால். செல்லமே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த விஷால் முதல் படமே வெற்றி கொடுத்ததால் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர் இடத்தை பிடித்தார். அதே சமயம் நடிகர் சங்கத்தின் தலைவராகவும் உள்ள விஷால் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்த பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என்றும் கூறி பிடிவாதமாக உள்ளார்.
தற்போது இவர் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் சமீபத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இந்த நிலையில் விஷால் சமீபத்தில் youtube சேனலுக்கு ஒன்று அளித்த பேட்டியில் தனது தந்தையிடம் மாட்டிக் கொண்டது குறித்து சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அந்தப் பட கேசட் வாடகைக்கு எடுத்து நானும் என்னுடைய நண்பர்களும் பார்த்தோம்.
அந்த கேசட்டை மறைத்து வைத்திருந்தபோது அதனை என்னுடைய தந்தை கண்டுபிடித்து கையில் எடுத்து வந்த போது மிகவும் பயமாக இருந்தது. ஆனால் நான் அமர்ந்திருந்த போது என்னுடைய தந்தை என்னை பார்த்து டியூஷன் எத்தனை மணிக்கு என்று கேட்டார். நானும் எட்டு மணிக்கு என்று சொன்னேன்.. சரி என்று சொல்லிவிட்டு அந்த கேசட்டை அங்கேயே வைத்துவிட்டு எதுவுமே சொல்லாமல் அப்படியே போய்விட்டார். அவருடைய அமைதி தான் என்னை மாற்றியது என்று விஷால் கூறியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க