பிரபல பழம்பெரும் நடிகை திடீர் மரணம்… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபல பழம்பெரும் நடிகை திடீர் மரணம்… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..!!

Published

on

தென்னிந்திய சினிமா அளவில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சுப்பலட்சுமி. கேரளாவில் பிறந்த இவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஜவகர் பாலபவனில் இசை கலைஞராகவும் நடன பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றினார். அதன் பிறகு 1951 ஆம் ஆண்டு அகில இந்திய வானொலியில் பணியாற்றிய இவர் தென்னிந்தியாவை சேர்ந்த முதல் பெண் இசைக்கலைஞர் என்ற சாதனையையும் படைத்தார்.

பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்த இவருக்கு திரை துறையில் டப்பிங் கலைஞராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் ஆல்பங்களில் நடித்த இவர் 66 வயதில் முதல் முறையாக பிரித்விராஜ் நடித்த நந்தனம் திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரையில் நுழைந்தார். அதனைத் தொடர்ந்து கல்யாணராமன், ராப்பகல், திலகம் மற்றும் சிஐடி மூசா உள்ளிட்ட மலையாள திரைப்படங்கள் மூலம் பிரபலமடைந்தார்.

Advertisement

மலையாளத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தமிழில் விஜயின் பீஸ்ட், விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் ராமன் தேடிய சீதை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். ஏராளமான விளம்பரங்களிலும் நடித்துள்ள இவர் கல்யாண கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவரது மறைவுக்கு ஒட்டுமொத்த திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement