LATEST NEWS
மிஷ்கின் இயக்கத்தில் விஜய்சேதுபதி… தொடங்கியது படப்பிடிப்பு பூஜை.. ஹீரோயின் யார் தெரியுமா..??

தென்னிந்திய சினிமா அளவில் ஹீரோவாக மட்டுமல்லாமல் பல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் இனி வில்லனாக நடிக்க மாட்டேன் என்று சமீபத்தில் கூறி இருந்த நிலையில் தற்போது இயக்குனர் மிஸ்கினுடன் கூட்டணி அமைத்துள்ளார். அதன்படி விஜய் சேதுபதி மற்றும் மிஸ்கின் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ள நிலையில் இன்று அதற்கான பூஜை நடைபெற்று உள்ளது.
விஜய் சேதுபதி தற்போது மகாராஜா திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இது அவரது ஐம்பதாவது படமாக உருவாகும் எனவும் அடுத்த ஆண்டு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. மற்றொரு பக்கம் அரவிந்த் சாமியுடன் இணைந்து காந்தி டாக்ஸ் என்ற பேசும் படத்தில் நடித்து வருகின்றார். தற்போது மிஸ்கின் இயக்கம் படத்தில் கமிட் ஆகியுள்ள நிலையில் படத்தின் டைட்டிலையும் படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
கலைப்புலி எஸ் தானு தயாரிக்கும் இந்த படத்திற்கு ட்ரெயின் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் போஸ்டர் உடன் விஜய் சேதுபதியின் ஃபர்ஸ்ட் லுக்கையும் படக்குழு வெளியிட்டுள்ளது. ஆக்சன் திரில்லர் படமாக உருவாகும் இந்த திரைப்படத்தின் சூட்டிங் முழுவதும் ரயிலில் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் டிம்பிள் ஹயாதி அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் தொடங்கியது. இந்த பூஜையில் இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் முரளி ராமசாமி, ராதா கிருஷ்ணன், தயாரிப்பாளர் அன்புச் செழியன் மற்றும் கல்யாணம் ஆகியோர் கலந்து கொண்டனர். தற்போது அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.