யாரும் எதிர்பாராத கூட்டணி ..! சிவகார்த்திகேயனுக்கு கதை சொன்ன பிரபல இயக்குனர்..!! – cinefeeds
Connect with us

CINEMA

யாரும் எதிர்பாராத கூட்டணி ..! சிவகார்த்திகேயனுக்கு கதை சொன்ன பிரபல இயக்குனர்..!!

Published

on

சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோவில் பங்கு பெற்று பிரபல காமெடியனாக வெற்றி பெற்ற தான் நடிகர் சிவகார்த்திகேயன். அதன்பிறகு தொலைக்காட்சி மூலமாக சினிமாவிற்குள் நுழைந்து தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் டாப் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் காரணமாக ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

கடைசியாக “அமரன்” திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. அடுத்ததாக பராசக்தி மற்றும் ஏ.ஆர் முருகதாஸ் படங்களில் நடித்து வருகிறார் . இந்நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்க இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் உடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். கூட்டணி உறுதியானால் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என்று கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in