“தமிழ்நாட்டு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்றில் பிரபல நடிகர்”…..  அப்ப வேற லெவல்ல இருக்க போகுது படம்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தமிழ்நாட்டு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்றில் பிரபல நடிகர்”…..  அப்ப வேற லெவல்ல இருக்க போகுது படம்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக விளங்குகிறார் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் தொகுப்பாளராக தனது திரை பயணத்தை ஆரம்பித்த இவர் பாண்டியராஜன் இயக்கத்தில் வெளிவந்த மெரினா என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். அதன்பிறகு பல திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். சமீபத்தில் இவருக்கு தொடர்ந்து படங்கள் பிளாப்பாக மிகவும் மன வேதனையிலிருந்த சிவகார்த்திகேயனுக்கு நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை கொடுத்தது. அதன் பிறகு டான் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.  இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் திரைப்படம் வருகிற 21ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளிவர உள்ளது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மரியா என்று ஆங்கிலேயர் நடித்துள்ளார்.

Advertisement

இத்திரைப்படத்தின் டீசர் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்த வருகிறார். அதில் அதிதி சங்கர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கின்றார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வரும் நிலையில் புது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தமிழ்நாட்டில் சேலத்துக்கு அருகில் சின்னப்பம்பட்டி என்ற குக்கிராமத்தில் பிறந்து ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த கிரிக்கெட் வீரர் நடராஜரின் வாழ்க்கை வரலாறு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனை பத்திரிக்கையாளர் சக்திவேல் பகிர்ந்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in