கோமாளிகள் திருந்த மாட்டாங்க….! சட்டம் தெரியும், மருத்துவம் தெரியணும் கிளம்பி வந்துடுறாங்க…. பதிலடி கொடுத்த வனிதா….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கோமாளிகள் திருந்த மாட்டாங்க….! சட்டம் தெரியும், மருத்துவம் தெரியணும் கிளம்பி வந்துடுறாங்க…. பதிலடி கொடுத்த வனிதா….!!!

Published

on

தமிழ் சினிமாவில் தற்போது ஹாட் டாபிக்காக விவாதிக்கப்படும் விஷயம் எது என்றால் நயன்தாராவுக்கு குழந்தை பிறந்துள்ளது தான். அதிலும் ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்ட இவர் கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தி வெளியாகவில்லை. திடீரென்று எப்படி இரட்டை குழந்தைங்களுக்கு பெற்றோர்களானார்கள் என்று கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றது.

அவர்கள் வாடகை தாயின் மூலம் குழந்தை பெற்றுள்ளார்கள் என்று தெரிவித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் தரப்பிலிருந்து இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.  திருமணம் செய்த தம்பதிக்கு 5 ஆண்டுகள் குழந்தை இல்லை என்றால்தான் சட்டப்படி வாடகத்தாய் மூலமாக குழந்தை பெற முடியும். தம்பதிகளில் ஒருவருக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருக்க வேண்டும் என பல விதிமுறைகள் இருப்பதாக செய்திகள் வளம் வருகிறது. இந்த சட்டத்தையும் மீறி வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விசாரணை நடத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் எப்போதும் சர்ச்சையான விஷயங்களில் சிக்கும் வனிதா விஜயகுமார் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். எந்த தவறையும் செய்யாத அழகான இரண்டு குழந்தைகளுக்கு அழகான வாழ்க்கையை ஒரு பெற்றோர் கொடுப்பதை விட அழகான விஷயம் என்ன உள்ளது. அவர்களின் இனிமையான தருணத்தை அளிக்கத் துடிப்பதே தண்டனைக்குரிய குற்றம் தான். எனக்கு சட்டம் தெரியும், மருத்துவம் தெரியும் என சில கோமாளிகள் பேட்டி கொடுத்து வருகிறார்கள்.

திருந்தவே மாட்டாங்க…. யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று கடவுளுக்கு தெரியும். முட்டாள் ஆகிய நீங்கள் எல்லாம் இதில் இருந்து தப்பித்து விடுவீர்கள் என்று நினைக்கிறீர்களா? நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் என் வாழ்த்துக்கள். மற்றவர்கள் சொல்வதை நீங்கள் அலட்சியப்படுத்திவிட்டு குழந்தையை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in