அதிர்ஷ்டக் கதவுகளைத் திறக்கும் புதன் பகவான்…! லட்சுமி தேவியின் அருளால் கோடீஸ்வர யோகம் பெறப்போகும் ராசிகள்…. உங்க ராசி இருக்கான்னு செக் பண்ணி பாருங்க…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அதிர்ஷ்டக் கதவுகளைத் திறக்கும் புதன் பகவான்…! லட்சுமி தேவியின் அருளால் கோடீஸ்வர யோகம் பெறப்போகும் ராசிகள்…. உங்க ராசி இருக்கான்னு செக் பண்ணி பாருங்க…!!

Published

on

ஜோதிட சாஸ்திரத்தின்படி அறிவு, புத்தி கூர்மை மற்றும் சிறந்த பேச்சாற்றலுக்குக் காரணியாக விளங்கும் புதன் பகவான், கடந்த ஜூன் 22-ஆம் தேதி பிற்பகல் கடக ராசிக்குள் பிரவேசித்துள்ளார். சராசரியாக ஒரு ராசியில் 23 முதல் 25 நாட்கள் வரை சஞ்சரிக்கும் புதனின் இந்த இடமாற்றம் அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தினாலும், குறிப்பாக ஐந்து ராசிகளுக்குப் பெரும் நற்பலன்களையும் அன்னை லட்சுமியின் ஆசிகளையும் அள்ளித்தரவுள்ளது.

இதன் மூலம் மிதுன ராசிமாணவர்களுக்குக் கல்வியில் உன்னதமான நிலையும், கடக ராசியினருக்கு நீர் சார்ந்த தொழில்கள் மற்றும் அழகு கலைத் துறைகளில் அசுர பண வரவும் உண்டாகும். அதேபோல் கன்னி ராசியைச் சேர்ந்த ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஜோதிடர்களுக்குப் புகழும், பெரும் பொருளாதார லாபமும் கிட்டும்.

Advertisement

சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசியினருக்குப் புதிய சொத்துக்கள், வாகனங்கள் வாங்கும் யோகமும், சுப காரியங்கள் கைகூடும் அமைப்பும் உருவாகும். குருவின் ஆதிக்கம் நிறைந்த மீன ராசி அன்பர்களுக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த திருமண வரன்கள் உறுதியாவதுடன், பிரிந்திருந்த நண்பர்கள் மற்றும் எதிரிகள் மீண்டும் சுமுகமாக இணைவார்கள்.

மேலும், ஜாதகத்தில் புதனின் சுப பலன்களை இன்னும் அதிகரித்துக் கொள்ள புதன்கிழமைகளில் பச்சை நிற ஆடைகள், பச்சைப் பயறு, காய்கறிகள் மற்றும் எழுதுபொருட்களைத் தானமாக வழங்கலாம் என்றும், புதன் காயத்ரி மந்திரங்களை பாராயணம் செய்வது நலம் பயக்கும் என்றும் ஜோதிடக் குறிப்புகள் கூறுகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in