LATEST NEWS
“விவாகரத்து செய்ய விருப்பம் இல்லை”…. திருமணம் குறித்த கேள்விக்கு….. பளிச்சென்று பதில் அளித்த திரிஷா….!!!!
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை திரிஷா .தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். ‘ஜோடி’ என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு துணைக் கதாபாத்திரத்தில் தமிழ் திரை உலகில் அறிமுகமானார் . அடுத்ததாக ‘மௌனம் பேசியதே’ திரைப்படம் இவருக்கு ஃபிலிம் பார் விருதே வாங்கி கொடுத்தது. அதை தொடர்ந்து மனசெல்லாம் , சாமி, எனக்கு 20 உனக்கு 18, கில்லி , அரண்மனை 2, கொடி, 96, பேட்ட என இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் ஏராளம்.
அவர் வாங்கிய விருதுகளும் ஏராளம். தமிழ் திரை உலகின் அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். 35 வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நடிகை திரிஷா தயாரிப்பாளர் வருன் மணியன் என்பவரை திருமணம் செய்ய இருப்பதாக பல வருடங்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகின. ஆனால் திருமணம் நடக்கவில்லை. இவர் திருமணம் பற்றி வெளிவரும் இந்த தகவல்களையும் காதில் போட்டுக் கொள்ளாமல் தனது நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். கதாநாயகிகளை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
தற்போது இவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. அதிலும் இந்த திரைப்படத்தில் குந்தவையாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் என்று தான் கூற வேண்டும். இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும், பேட்டிகளிலும் 39 வயது ஆகியும் திரிஷா ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்துள்ளார்.
திருமணம் எப்போது என்று என்னிடம் கேட்டால் எனக்கு கூட தெரியாது. வாழ்நாள் முழுவதும் என்னுடன் சேர்ந்து இருக்க வேண்டிய ஒருவரை நான் இன்னும் பார்க்கவில்லை. திருமணம் செய்து அதன் பின்னர் விவாகரத்து பெற எனக்கு விருப்பம் கிடையாது. திருமணத்திற்கு பிறகு ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சேர்ந்து கடைசி காலம் வரை வாழ வேண்டும். அப்படிப்பட்ட ஒருவர் தான் எனக்கு வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
