“எங்க அம்மா ஒரு ஊதாரி”….! அண்ணன்கள் குடிகாரர்கள்…. கலங்கிய பிரபல நடிகை….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எங்க அம்மா ஒரு ஊதாரி”….! அண்ணன்கள் குடிகாரர்கள்…. கலங்கிய பிரபல நடிகை….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் பிதாமகன் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை சங்கீதா. இவர் நடிகை, மாடல், பின்னணி பாடகி என்று பன்முகத்தன்மை கொண்டவர். பல திரைப்படங்களில் நடித்த இவருக்கு பிதாமகன், தனம் உன்னிடம் திரைப்படங்கள் நல்ல வரவேற்பு கொடுத்தது. சங்கீதாவின் பாட்டனார் கே ஆர் பாலன். இவர் ஒரு திரைப்பட தயாரிப்பாளர். 20க்கும் மேற்பட்ட தமிழ் படங்களை தயாரித்துள்ளார். இவரின் தந்தையும் பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு பாடகர் க்ரிஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

 

Advertisement

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில் தனது அம்மா மீது சுமத்திய பல குற்றச்சாட்டுகளுக்கு இவர் பதில் அளித்திருந்தார். அதில் அவர் தெரிவித்ததாவது நடிகர், நடிகைகளுக்கு உள்ள பிரச்சனை என்னவென்றால் அவர்களது பெற்றோர்கள் சிறுவயதிலேயே அவர்களை நடிக்க அனுப்பி வைத்துவிட்டு அதில் வரும் பணத்தை வைத்து மொத்த குடும்பத்தையும் சொகுசாக வாழ வைப்பார்கள். அதனால் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு நடிகரும், நடிகையும் தங்களது வாழ்க்கையை தங்களுக்கு பிடித்தது போல் வாழ முடியாமல் தவித்ததுண்டு.

சமீபத்தில் தனது மகள் தன்னை வீட்டை விட்டு துரத்தி விட்டதாக சங்கீதாவின் அம்மா குற்றம் சாட்டியிருந்தார். அதற்கு அவர் பதில் அளித்ததாவது கஷ்டப்பட்டு நடித்த சேமித்து வைத்த பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்யும் பொழுது அதற்கு சில கட்டுப்பாடுகள் கொண்டு வந்தேன். இப்போது கூட அவர்களுடைய செலவை நான்தான் பார்த்துக் கொள்கிறேன். ஆனால் அதனை குறைத்துக் கொண்டேன். ஏடிஎம் மிஷினில் பணம் வரவில்லை என்றால் கோபத்தில் அதனை தட்டி பார்ப்போம் அல்லவா? அதே போல் தான் என் அம்மாவும் என் மீது குற்றம் சாட்டுகிறார்.

Advertisement

என் அம்மா என் மீது அபாண்டமாக பொய் கூறுகிறார். அந்த பத்திரத்தை பார்த்தால் யாரிடம் இருந்து வந்தது என்று தெரிந்துவிடும். அது மட்டும் இன்றி அந்த வீட்டின் மேல் நிறைய கடன்கள் இருந்தது. அதனை நான் தான் அடைத்தேன். அதனை அடைத்த பின்னர் என் பெயருக்கு வந்து விட்டது. ஒருவேளை நான் கடன் அடைக்காவிட்டால் கடன் கொடுத்தவருக்கு வீடு செஞ்சிருக்கும். அது மட்டும் இல்லாமல் அந்த வீட்டில் இப்போதும் என் அம்மா தான் இருக்கின்றார் அவர் கூறுவதெல்லாம் பொய். சூழ்நிலை காரணமாக 14 வயது இருக்கும்போது என்னை நடிக்க அனுப்பி வைத்துவிட்டார்.

 

Advertisement

 

என்னுடைய சகோதரர்கள் குடிகாரர்கள், அம்மா ஊதாரித்தனமாக செலவு செய்பவர். மொத்த குடும்ப சுமையையும் என் மீது சுமத்தி என்னை நடிக்க வைத்தார்கள். எங்கள் விஷயத்தை பொருத்தவரை என் அம்மா தப்பு என்று மனம் வருந்தி பேசியுள்ளார் சங்கீதா.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in