LATEST NEWS
விருதுகளை அள்ளி குவிக்கும் ‘சூரரைப் போற்று’….. மீண்டும் மீண்டும்….. தற்போது 8 விருதுகள்….. குவியும் வாழ்த்து….!!!!

67 வது தென்னிந்திய பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் சூரரைப் போற்று மொத்தம் எட்டு விருதுகளை அள்ளிக் குவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு சுதா கோங்குரா இயக்கத்தில் வெளியான திரைப்படம் சூரரை போற்று. இந்த திரைப்படத்தில் சூர்யா ஹீரோவாக நடித்தார். இவருக்கு ஜோடியாக அபர்ணா பால முரளி நடித்திருந்தார். அது மட்டுமில்லாமல் ஊர்வசி, மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் கதையானது ஏர் டக்கான் வானூர்தி நிறுவனத்தை துவங்கியவரான கோபிநாத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்.
அமேசான் பிரைம் வீடியோ மூலம் வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்தது. 2020 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான இந்த திரைப்படத்தைப் பார்த்து பலரும் சூர்யாவின் நடிப்பை பாராட்டி வந்தனர். ஏற்கனவே சூர்யாவிற்கு இந்த திரைப்படத்திற்காக தேசிய விருது வழங்கப்பட்டது.
இவருக்கு மட்டுமில்லாமல் சிறந்த நடிகைக்கான விருது, சிறந்த இயக்கம், சிறந்த இசையமைப்பு, உள்ளிட்ட விருதுகளை இந்த திரைப்படம் தட்டிச் சென்றது. இதைத்தொடர்ந்து தற்போது 67 வது தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் சூரரைப் போற்று திரைப்படம் மொத்தம் 8 விருதுகளை குவித்துள்ளது. இதில் சிறந்த இயக்குனர் (சுதா கொங்கரா), சிறந்த நடிகர் (சூர்யா), சிறந்த நடிகை (அபர்ணா பாலமுரளி), சிறந்த இசை ஆல்பம் (ஜி.வி.பிரகாஷ்), சிறந்த துணை நடிகை (ஊர்வசி), சிறந்த பின்னணி பாடகர் (கோவிந்த் வசந்தா, கிறிஸ்டின் ஜோஸ்), சிறந்த பின்னணி பாடகி (தீ), சிறந்த ஒளிப்பதிவு (நிகோத் பொம்மி) ஆகிய பிரிவுகளில் விருதுகளை அள்ளி சென்றுள்ளது.