வாணி போஜன் , பிரியா பவானிசங்கரை தொடர்ந்து… வெள்ளித்திரையில் கால்பதிக்கும்… சின்னத்திரை நாயகி யார் தெரியுமா…? - cinefeeds
Connect with us

LATEST NEWS

வாணி போஜன் , பிரியா பவானிசங்கரை தொடர்ந்து… வெள்ளித்திரையில் கால்பதிக்கும்… சின்னத்திரை நாயகி யார் தெரியுமா…?

Published

on

சன் டிவில்  ஒளிபரப்பான ‘தெய்வமகள்’ தொலைக்காட்சி தொடர் மூலம் சீரியல் துறையில் கால் பதித்தவர் வாணி போஜன் ஆவார். இவர் அப்பொழுது ‘சின்னத்திரை நயன்தாரா’ என்று செல்லமாக அழைக்கப்பட்டார். பின்னர் இந்த சீரியல் முடிவடைந்த பிறகு இவர் வெள்ளித் திரையில் ‘ஓ மை கடவுளே’  என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.இதன் பின்னர் ‘triples, love’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

செய்தி வாசிப்பாளரான ப்ரியா பவானி சங்கர்  ‘கல்யாணம் முதல் காதல்வரை’ சீரியலின் மூலம் நடிகையாக அங்கீகரிக்கப்பட்டார். மேலும் இவர் ‘மேயாத மான்’ என்ற படத்தின் மூலம்  வெள்ளி துறையில் தனது கலைப்பயத்தை தொடர்ந்தார். பின்னர் ‘ஓ மணப்பெண்ணே’, ‘ருத்ரன்’ போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

Advertisement

தற்பொழுது இவர்களைப் போல சின்னத்திரை பிரபலமான ராதிகா ப்ரீத்தியும் தனது கலைப்பணித்து வெள்ளித்திரையில் ஆரம்பிக்க உள்ளார். பூவே உனக்காக சீரியலில் பூவரசியாக அறிமுகமானவர் நடிகை ராதிகா பிரித்தி ஆகும். இவர் இந்த சீரியலில்  நடித்ததால் இல்லதரசிகளின்  மனதில் மிகவும் நெருக்கமான இடத்தை பெற்றிருந்தார்.

இந்நிலையில் இவர் வெள்ளிதிரையில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அது சந்தானத்துடன் ’80’S BUILD UP’ என்ற படமாகும் . இந்த படத்தில் சந்தானத்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தினை S. கல்யாண் இயக்குகிறார். இதில் இவர்களுடன் K.S.ரவிக்குமார், மன்சூர் அலிகான், ஆனந்தராஜ், ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி மற்றும் தங்கதுரை நடிக்கவுள்ளனர். இதற்கு ஜிஹ்ப்ரான் இசையமைக்கிறார்.

Advertisement

Continue Reading
Advertisement