LATEST NEWS
“உடனே டெலீட் பண்ணுங்க, கேஸ் போடுங்க” விஜய்க்கு ஒரு நீதி..? சீமானுக்கு ஒரு நீதியா..? காவல்துறைக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி..!!
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவரான சீமான் குறித்து இணையதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது காவல்துறை ஏன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக முதல்வர் விஜய் குறித்துப் பேசிய ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல்துறை, சீமான் விவகாரத்தில் மட்டும் ஏன் மௌனம் காக்கிறது என்ற இரட்டை நிலைப்பாட்டையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லெக்ஷ்மண சந்திர விக்டோரியா கௌரி, இணையதளங்களில் சீமான் தொடர்பாகப் பகிரப்பட்டுள்ள மார்பிங் செய்யப்பட்ட ஆபாச மற்றும் அவதூறு புகைப்படங்களைச் சம்பந்தப்பட்ட சமூக வலைத்தள பக்கங்களிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், இந்த அநாகரிகச் செயலில் ஈடுபட்டு அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்த நபர்களைக் கண்டறிந்து, அவர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்குத் திட்டவட்டமான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
