LATEST NEWS
படையப்பா நீலாம்பரியை தெரியும்.. ஆனா அந்த கதாபாத்திரம் யாரை நினைத்து எழுதியது தெரியுமா..? உண்மையை போட்டுடைத்த கே.எஸ் ரவிக்குமார்..!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1999-ஆம் ஆண்டு வெளியான படம் படையப்பா. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்துள்ளார். மேலும் ரம்யா கிருஷ்ணன் நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்ததும் இந்த படத்தின் வெற்றிக்கு ஒரு காரணம். படம் வெளியாகி 24 ஆண்டுகள் கடந்து விட்டது.
ஆனாலும் நீலாம்பரி கதாபாத்திரம் போல் தமிழ் சினிமாவிற்கு வேறு ஒரு கதாபாத்திரம் வரவில்லை. நெகட்டிவ் கதாபாத்திரம் என்றால் பெரும்பாலும் ஆண்களே நடிப்பார்கள். ஒரு சில படங்களில் தான் பெண்கள் நடித்த நெகட்டிவ் கதாபாத்திரம் பெரிதாக பேசப்படும். அந்த வகையில் படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் முதல் பாதியில் மார்டன் பெண்ணாகவும் அடுத்த பாதியில் தனது காதலனை பழிவாங்க துடிக்கும் வில்லியாக கலக்கியிருப்பார்.
இந்நிலையில் இயக்குனரும், நடிகருமான கே.எஸ் ரவிக்குமார் நீலாம்பரி பற்றி பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் அவர் கூறியதாவது, நீலாம்பரி கதாபாத்திரத்தை எழுதும்போது ஜெயலலிதா மேடமை மனதில் வைத்து தான் எழுதி இருந்தேன். அப்படி ஒரு கம்பீரமான பெண்மணிக்கு எந்த மாதிரியான உடல் மொழி இருக்க வேண்டும் என்று நினைத்து உணர்ச்சிகரமாக அந்த கதாபாத்திரத்தை எழுதியிருந்தேன்.
படையப்பா படத்தை பார்த்த ஜெயலலிதா அவர்கள் ரஜினிகாந்த்திடம் படம் சூப்பராக இருக்கிறது என கூறியிருந்தாராம். படையப்பா படம் எல்லா நாட்டிலும் வெற்றிகரமாக ஓடியது. படத்தைப் பார்த்து ஜெயலலிதா மேடம் பிடித்திருக்கிறது என்று சொன்னது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு என கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது