LATEST NEWS
அஜித்தின் பில்லா பட இயக்குனரின் படத்தில் நடிகர் முரளியின் மகன்.. ஹீரோயின் யார் தெரியுமா..? முதல் படம் எப்படி இருக்குமோ..!!

இயக்குனர் விஷ்ணுவர்தன் அறிந்தும் அறியாமலும், பட்டியல், பில்லா, ஆரம்பம் ஆகிய வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இதனை அடுத்து தேசிய விருது பெற்ற ஷெர்ஷா திரைப்படத்தின் மூலம் விஷ்ணுவர்தன் பாலிவுட்டில் நுழைந்தார். அடுத்ததாக சல்மான் கான் வைத்து விஷ்ணுவர்தன் ஒரு படத்தை இயக்க உள்ளார்.
இந்நிலையில் மறைந்த நடிகர் முரளியின் மகனும் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி நடிகராக அறிமுகமாகும் புதிய திரைப்படத்தை இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார். ஆகாஷ் முரளியை வைத்து ரொமான்டிக் எண்டர்டெய்னர் ஜானரில் உருவாகும் இந்த படத்தை மாஸ்டர் திரைப்படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.
இந்த படத்தில் ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்து வருகிறார். மேலும் சரத்குமார், பிரபு கணேசன், குஷ்பூ சுந்தர், ஜார்ஜ் கோரா, கல்கி கோச்லின் உள்ளிட்ட ஏராளமானார் இந்த படத்தில் நடிக்கின்றனர். போச்சுகள், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றது.
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விரைவில் படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் முரளியின் மகன் ஆகாஷ் முரளி நடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.