LATEST NEWS
கேமியோ ரோலில் மிரட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினி.. லால் சலாம் படத்தின் மொத்த பட்ஜெட் எவ்வளவு தெரியுமா..? வெளியான தகவல்..!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு வை ராஜா வை என்ற திரைப்படத்தை இயக்கினார். சுமார் 8 ஆண்டுகள் கழித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். லால் சலாம் படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. கிரிக்கெட் பின்னணியில் உருவான லால் சலாம் படம் நேற்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா.?
மகள் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த லால் சலாம் படத்திற்கு 50 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் நாள் படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இனி வரும் நாட்களிலும் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.