விஜயை பார்க்க போனது ஒரு குத்தமா..? ஷாஜகான் பட துணை நடிகருக்கு நடந்த அவமதிப்பு.. அவரே பகிர்ந்த ஷாக்கிங் தகவல்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

விஜயை பார்க்க போனது ஒரு குத்தமா..? ஷாஜகான் பட துணை நடிகருக்கு நடந்த அவமதிப்பு.. அவரே பகிர்ந்த ஷாக்கிங் தகவல்..!!

Published

on

சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் குழந்தை நட்சத்திரமாக ஆரம்பத்தில் நடித்த கடந்த 1992-ஆம் ஆண்டு தனது அப்பாவின் இயக்கத்தில் வெளியான நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் விஜய் கதாநாயகனாக அறிமுகமானார் அதன் பிறகு பூவே உனக்காக படம் நல்ல திருப்பு முறையாக அமைந்தது.

இதனையடுத்து லவ் டுடே, ஒன்ஸ்மோர், காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய், துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே, ப்ரெண்ட்ஸ், ஷாஜகான், யூத், பகவதி உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்துள்ளார். நாட்கள் செல்ல செல்ல விஜயின் மதிப்பு உயர்ந்து கொண்டே போனது.

Advertisement

சமீப காலகட்டங்களில் சூப்பர் ஹிட் படமான தெறி, பைரவா, மெர்சல், சர்க்கார், பிகில், பீஸ்ட், மாஸ்டர், லியோ உள்ளிட்ட வெற்றி படங்களில் விஜய் நடித்துள்ளார். இந்நிலையில் ஷாஜகான் படத்தில் விஜயின் நண்பராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் கிருஷ்ணா திவாகர். அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் கூறியதாவது, ஷாஜகான் படத்தில் நான் விஜய்யுடன் நடித்திருந்தேன்.

அந்த படத்திற்கு கிடைத்த வெற்றி எனக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்தது. அந்த நேரம் படிப்பில் மீதி இருந்த ஆர்வத்தால் சினிமா பக்கம் வரவில்லை. தமிழில் பட வாய்ப்புகள் கிடைப்பது இல்லை. நான் ஒரு முறை விஜயை சந்திக்க முயற்சி செய்தேன். அப்போது செக்யூரிட்டியிடம் நான் விஜயுடன் ஷாஜகான் படத்தில் இணைந்து நடித்தேன் என கூறினேன்.

Advertisement

அதற்கு அவர் சார் அது ஷாஜகான் விஜய். இப்போ அவர் பீஸ்ட் விஜய் என கூறினார்கள். அப்போதுதான் விஜயை சந்திப்பது கடினம் என நினைத்தேன். வருங்காலத்தில் கண்டிப்பாக நான் விஜயை சந்திப்பேன் தமிழில் நிறைய படங்கள் நடிப்பேன் என கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement