LATEST NEWS
என் வாழ்க்கையே சிதறி போச்சு.. ஹிட் படங்களை கொடுத்த இயக்குனருக்கா இந்த நிலைமை..? இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!
பிரபல இயக்குனரான நாகராஜ் முரளி சுவலட்சுமி ஆகியோரை வைத்து தினம்தோறும் என்ற படத்தை இயக்கினார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஏராளமான திறமைகளை கொண்ட நாகராஜ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். அவரால் தொடர்ந்து படங்களை இயக்க முடியவில்லை.
இயக்குனர் நாகராஜ் மின்னலே, காக்க காக்க உள்ளிட்ட கெளதம் எனில் பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் கதை விவாதங்களில் சீன் சொல்வதை நாகராஜ் தனது பணியாக மாற்றிக் கொண்டார். ஆனால் அவரால் குடிக்காமல் இருக்க முடியாது. இதனால் அவரை நம்பி பட வாய்ப்பு கொடுக்க யாரும் முன் வரவில்லை.
சமீபத்தில் நாகராஜ் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது, குடிப்பழக்கத்தால் எனது வாழ்க்கையை சிதறி போனது. ஏராளமான பட வாய்ப்புகளை இழந்தேன். காலையில் 4 மணிக்கு எல்லாம் எழுந்து குடித்தால் தான் அடுத்த கட்ட வேலை நடக்கும். இப்போது அப்படியெல்லாம் இல்லை குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டு வந்து விட்டேன்.
மதுவை கையில் எடுத்து 6 ஆண்டுகள் ஆகிறது ஆரோக்கியத்துடன் இருந்தால் போதும் என மதுவை நிறுத்தி விட்டேன் என கூறியுள்ளார். தற்போது நாகராஜை நம்பி படங்களை தர தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளனர். அவர் ஒரு புதிய படத்தை இயக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். தற்போது நாகராஜ் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.