சூர்யா, கார்த்தி பண்றது பெரிய தப்பு.. சிவக்குமார் ஐயா ஏன் அதை செய்யல..? ஆவேசமாக பேசிய கஞ்சா கருப்பு…!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

சூர்யா, கார்த்தி பண்றது பெரிய தப்பு.. சிவக்குமார் ஐயா ஏன் அதை செய்யல..? ஆவேசமாக பேசிய கஞ்சா கருப்பு…!!

Published

on

பருத்திவீரன் பட இயக்குனர் அமீருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை குறித்து விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பருத்தி வீரன் படம் தயாரிக்கும் போது அமீர் பொய் கணக்கு காட்டி பணத்தை திருடினார் என ராஜா கூறியுள்ளார்.

#image_title

அந்த படத்தில் வேலை பார்த்த இயக்குனர்களான சசிகுமார், சமுத்திரக்கனி, நடிகர் பொன்வண்ணன், பாடலாசிரியர் சினேகன், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் அமீருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். இதனால் ஞானவேல் ராஜா சமூக வலைதளத்தில் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். நடிகர் கஞ்சா கருப்பு அமீருக்கு ஆதரவாக பேசி உள்ளார்.

#image_title

பருத்திவீரன் படம் இல்லைனா இன்னைக்கு கார்த்தி இல்ல. அவர் இன்னைக்கு 50 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்றால் அதற்கு அமீர் அண்ணன் தானே காரணம். சிவகுமார் ஐயா ஞானவேல் ராஜாவை கூப்பிட்டு நீ பேசுறது தப்புன்னு சொல்லணும். அமீர்க்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து செட்டில்மெண்ட் பண்ணுனு சொல்லணும்.

#image_title

எம்ஜிஆர் ரஜினி இரண்டு பேரும் அவங்க குருநாதர்களுக்கு அவ்வளவு மரியாதை கொடுத்தாங்க. எந்த மேடை போனாலும் கார்த்தி பருத்திவீரன் பட டயலாக்கை பேசி கைதட்டல் வாங்குகிறார். என பேசி இருந்தார். சமீபத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளர் பருத்திவீரன் படங்களுக்கு பிறகு உங்களை ஸ்டூடியோ கிரீன் கார்த்தி, சூர்யா ஆகியோரின் படங்களில் பார்க்க முடியவில்லை ஏன்? என கேள்வி எழுப்பினார்.

#image_title

அதற்கு பதில் அளித்த கஞ்சா கருப்பு நான் அமீர் அண்ணன் இயக்குனர் சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோருடன் இருப்பதுதான் காரணம். ஜப்பான் படத்தில் என்னை போலவே ஒரு ஆர்டிஸ்டை நடிக்க வைத்திருக்கிறார்கள். இது முறை கெட்ட செயல். நான் கடுமையாக கண்டித்து கேஸ் போட முடியும். கஞ்சா குடிக்கி என்ற பெயர் எனக்கு மட்டும்தான் சொந்தம். அவங்களுக்கு கிடையாது. அதை யூஸ் பண்ணி இருக்காங்க என ஆவேசமாக பேசியுள்ளார்.

Advertisement