வீரம் படத்தில் அஜித்துடன் நடித்த குழந்தை நட்சத்திரமா இது..? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா.. வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

வீரம் படத்தில் அஜித்துடன் நடித்த குழந்தை நட்சத்திரமா இது..? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா.. வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ..!!

Published

on

நடிகர் அஜித் சிறுத்தை சிவா இயக்கிய வீரம் படத்தில் நடித்தார். அந்த படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் யுவினா. வீரம் படத்தில் மழலை மொழியில் யுவினா அஜித்துடன் பேசும் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

அவர் சூர்யாவின் மாஸ், விஜய்யின் சர்க்கார் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். ஹிந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களிலும் யுவினா நடித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் யுவினா பல்வேறு டிவி விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

Advertisement

ஜெயம் ரவியின் சைரன் படத்தில் யுவினா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. யுவினாவின் அம்மா தேவி பிரபல விளம்பர நடிகை ஆவார். அவர் ஒரு சில சீரியல்களிலும் நடித்துள்ளார்.

யுவினாவும் அவரது அம்மா தேவியும் சேர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான சூப்பர் மாம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த யுவினா தற்போது டீன் ஏஜ் பெண்ணாக வளர்ந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டார். அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.

Advertisement

இந்நிலையில் சைரன் பட நிகழ்ச்சியில் யுவினா பங்கேற்ற வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் யுவினா அதுக்குள்ள பெரிய பொண்ணா வளர்ந்துட்டாங்களா? என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in