அழகான மனைவி, அன்பான குடும்பம்.. 13-வது திருமண நாளை கொண்டாடிய நடிகை காயத்ரி.. இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!! - cinefeeds
Connect with us

GALLERY

அழகான மனைவி, அன்பான குடும்பம்.. 13-வது திருமண நாளை கொண்டாடிய நடிகை காயத்ரி.. இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!!

Published

on

சின்னத்திரை நடிகை காயத்ரி மானாட மயிலாட என்ற ரியாலிட்டி ஷோ மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இதனையடுத்து சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் சீரியலில் நிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு அடுத்தடுத்த சீரியல் வாய்ப்புகள் வந்தது.

Advertisement

அந்த வகையில் சரவணன் மீனாட்சி சீரியலில் காயத்ரி நடித்தார்.

இதனை தொடர்ந்து தாமரை, மோகினி, பிரியசகி, பொன்னூஞ்சல், அழகி, மெல்ல திறந்தது கதவு, கழுத்து மேடு உள்ளிட்ட பல சீரியல்களில் காயத்ரி நடித்துள்ளார்.

Advertisement

தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மீனாட்சி பண்ணுங்க சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நடன இயக்குனர் இயக்குனரான யுவராஜ் என்பவரை காயத்ரி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 12 வயதில் தருண் என்ற மகன் உள்ளார்.

Advertisement

கடந்த நவம்பர் மாதம் காயத்ரிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் காயத்ரி யுவராஜ் தம்பதியினர் தங்களது 13-ஆவது திருமண நாளை கொண்டாடியுள்ளனர்.

அதனால் காயத்ரி தனது கணவர், மகன், மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திருமண நாள் வாழ்த்து தெரிவித்து லைக்ஸ்களை அள்ளி குவிக்கின்றனர்.

Advertisement

 

 

Advertisement
Continue Reading
Advertisement