GALLERY
அழகோ அழகு.. காதல் கணவர், மகனுடன் கியூட்டாக போஸ் கொடுக்கும் நடிகை சுஜா.. டிரெண்டிங் போட்டோஸ் இதோ..!!

நடிகை சுஜா வருணே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் பாடல்களுக்கு சுஜா நடனமும் ஆடுவார்.
ஒரு சில படங்களில் சுஜா கதாநாயகியின் தோழியாக நடித்துள்ளார்.
இவர் வாத்தியார், பள்ளிக்கூடம், ஐந்தாம் படை, திருவண்ணாமலை போன்ற படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆகியுள்ளார்.
சென்னையில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிரபல பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் சுஜா போட்டியாளராக கலந்து கொண்டார்.
பிக் பாஸ் வீட்டில் சுஜா 90 நாட்கள் விளையாடி அசத்தினார்.
இதனையடுத்து சிம்பு தொகுத்து வழங்க பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சுஜா பங்கேற்று 14 நாட்களிலேயே எலிமினேட் ஆகிவிட்டார்.
இதனை தொடர்ந்து பிக் பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியில் சுஜா போட்டியாளராக கலந்து கொண்டு தனது கணவர் சிவகுமாருடன் ஜோடி சேர்ந்து ஆடினார்.
அந்த நிகழ்ச்சியில் சுஜாவும் அவரது கணவரும் அசைத்தளாக நடனமாடி டைட்டிலை வென்றனர்.
கடந்த 2019-ஆம் ஆண்டு சுஜா சிவக்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதியினருக்கு அத்வைத் என்ற மகன் உள்ளார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சுஜா தனது கணவர் மற்றும் மகனுடன் வெளிநாட்டில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.