LATEST NEWS
ஒரு நிமிஷம் உயிர் கைல இல்ல.. இப்படிதான் தப்பிச்சோம்.. நடிகை ராஷ்மிகா வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்..!!

நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னடம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ராஷ்மிகா பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
தமிழில் ராஷ்மிகா விஜயுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. இந்நிலையில் ராஷ்மிகா மும்பையில் இருந்து ஹைதராபாத்திற்கு விஸ்தாரா நிறுவனத்தின் விமானத்தில் பயணம் செய்தார். அவருடன் நடிகை ஷ்ரத்தா தாசம் பயணித்துள்ளார்.
அந்த விமானம் மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு 30 நிமிடம் கழித்து நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்ததும் விமானி சாதுரியமாக செயல்பட்டு விமானத்தை மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் தரை இறக்கினார். இதனால் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டனர்.
இந்நிலையில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டபோது உயிர் தப்பித்தது எப்படி என்பது பற்றி ராஷ்மிகா புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அதிர்ஷ்டவசமாக மரணத்திலிருந்து உயிர் தப்பி விட்டோம் என கூறியுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்ததும் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனாலும் நல்ல வேலையாக அவர்கள் உயிர் தப்பித்ததால் அனைவரும் நிம்மதி அடைந்தனர்.