தொழிலதிபருடன் திருமணமா..? அக்காள் மகனுடன் வந்த DD-க்கு காத்திருந்த அதிர்ச்சி.. உண்மையை போட்டுடைத்த பயில்வான்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

தொழிலதிபருடன் திருமணமா..? அக்காள் மகனுடன் வந்த DD-க்கு காத்திருந்த அதிர்ச்சி.. உண்மையை போட்டுடைத்த பயில்வான்..!!

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பான காப்பி வித் டிடி, ஜோடி நம்பர் 1 உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கியுள்ளார். இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. எப்போதும் நிகழ்ச்சிகளில் பாசிட்டிவ் எனர்ஜியுடன் கலகலப்பாக தொகுத்து வழங்குபவர் தான் திவ்யதர்ஷினி. இவர் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்றால் அதற்கு தனி சிறப்பு உள்ளது.

தொகுப்பாளராக மட்டுமில்லாமல் நல தமயந்தி, விசில், பவர் பாண்டி, துருவ நட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்ளிட்ட படங்களிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பல படங்களில் கதாநாயகியாக நடிக்க திவ்யதர்ஷினிக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சில காரணங்களால் அதனை நிராகரித்து விட்டார். கடந்த 2014-ஆம் ஆண்டு தனது நண்பரும், காதலருமான ஸ்ரீகாந்த் என்பவரை திவ்யதர்ஷினி திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக சில வருடங்களிலேயே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டு பிரம்மாண்டமாக நடந்த திவ்யதர்சனியின் திருமண வாழ்க்கை பாதியிலேயே முறிந்தது. இந்நிலையில் விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் பிரபலங்கள் குறித்து பல தகவல்களை கூறி சர்ச்சைகளை கிளப்பி விடுவார்.

அந்த வகையில் தற்போது பயில்வான் திவ்யதர்ஷினி குறித்து கூறியது என்னவென்றால், ஒரு நிகழ்ச்சியில் திவ்யதர்ஷினி தனது அக்காள் பிரியதர்ஷினியின் மகனுடன் கலந்து கொண்டார். அது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.

Advertisement

அதனை பார்த்த பலரும் திவ்யதர்ஷினிக்கு இரண்டாவது திருமணமா? அவர் ஒரு தொழிலதிபராம் என பல்வேறு கிசுகிசுக்களை கிளப்பிவிட்டனர். அது குறித்து விசாரித்த போது தான் அவர் திவ்யதர்ஷினி அக்காள் மகன் என்பது தெரியவந்தது. நெட்டிசன்கள் அப்படி கூறியது வேதனை அளித்ததாக பிரியதர்ஷினியும், திவ்யதர்ஷினியும் கூறியிருந்தார்கள் என பயில்வான் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in