எங்க கிட்ட Proof இருக்கு.. “மறைந்த பாடகி பவதாரணி பெயரில் 80 லட்சத்தை வாரி சுருட்டிட்டாங்க”.. கோபத்தில் கொந்தளித்த கங்கை அமரன்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

எங்க கிட்ட Proof இருக்கு.. “மறைந்த பாடகி பவதாரணி பெயரில் 80 லட்சத்தை வாரி சுருட்டிட்டாங்க”.. கோபத்தில் கொந்தளித்த கங்கை அமரன்..!!

Published

on

திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தல் இசைக்கலைஞர்கள் சங்கத்தின் அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது. மூன்றாவது முறையாக இசையமைப்பாளர் தீனா தலைவர் பதவிக்கு போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் சென்னை வடபழனியில் இருக்கும் திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்க அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இசையமைப்பாளர் கங்கை அமரன், திரைப்பட உலகில் தொழிலாளர்களுக்காக தொடங்கிய முதல் சங்கம் இது.

அதன் பிறகு தான் மற்ற யூனியன்கள் எல்லாம். அந்த காலத்தில் தின சம்பளம் எல்லாம் கிடையாது. சங்கத்தை சேர்ந்தவர்கள் போராடி வாங்கி தந்தனர். அவர்களது கருணையால் நாங்கள் இப்போது நன்றாக இருக்கிறோம். இளையராஜா வந்து இந்த இடத்தில் உட்காரனும். எங்கள் வீட்டில் நடந்த துக்க செய்தியால் அவர் சார்பாக நான் வந்திருக்கிறேன். இந்த யூனியனை காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது.

Advertisement

யூனியன் தொடங்கப்பட்ட போது ஆரம்பிக்கப்பட்ட ரூல் படி ஒருவருக்கு 2 வருட பதவி, 2 வருடம் நீட்டித்துக் கொள்ளலாம். தொடர்ந்து இந்த சங்கத்தை ஆண்டவர்கள் யாரும் இல்லை. ஆனால் இந்த தேர்தலில் தீனா தனது அதிகாரத்தை பயன்படுத்தி 4 வருடம் தலைவராக இருக்கிறார். அடுத்து நாம் தான் ஆளப்போகிறோம் என நினைக்கிறார். நாங்கள் இதனை ஒத்துக் கொள்ளவில்லை. இது அரசியல் கட்சி இல்லை. அவர் மட்டும் ஆள வேண்டும் என்பதற்கு.

அனைவரும் தலைவர்களாக இருந்து அனுபவத்தை பெற வேண்டும் என்று இளையராஜா உள்பட அனைவரும் ஏற்கனவே கூறினோம். திரைப்பட உலகிற்கு இளையராஜாவின் இசை பெரும் பங்கு வகித்துள்ளது. தீனா பண்றது சரி இல்லை. ஒருவர் 4 வருடம்தான் பதவியில் இருக்க வேண்டும் என கூறியும், அவர் சும்மா ஏதாவது சொல்லிட்டு இருப்பார் என்று யாராவது சொல்லுவாங்களா? இளையராஜாவை தூக்கி எறிந்து பேசிய ஆள் எங்களுக்கு தேவையில்லை.

Advertisement

நம்மை வளர்த்து விட்டவர் இளையராஜா. அவர் என்ன சொல்வது நாம் என்ன கேட்பது என்பது போல தீனா இருக்கிறார். இந்த யூனியனில் நடக்க கூடாத பல சம்பவங்கள் நடந்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் பணம் கேட்டு பலர் கையெழுத்து போட்டதாக சில ஆவணங்களை கங்கை அமரன் ஆதாரமாக காட்டியுள்ளார். இறந்த பவதாரணையின் கையெழுத்தை கூட போட்டு 80 லட்சம் மேல் பணத்தை வாரி சுருட்டி இருக்கிறார்கள் என கோபத்தில் கொந்தளித்தார் கங்கை அமரன். கங்கை அமரன் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in