LATEST NEWS
என்னது..! நடிகர் விக்ரமின் தங்கலான் படத்தில் சூர்யா வருகிறாரா..? படக்குழுவினர் எடுத்த அதிரடி முடிவு..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார். மேலும் யோகி பாபு, கோவை சரளா, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
சூர்யாவின் 42-வது படமான கங்குவா நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் சமீபத்தில் சூர்யா டப்பிங் பேசி முடித்தார். மாபெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள கங்குவா படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
சமீபத்தில் கங்குவா படத்தை பார்த்து சூர்யா படம் நன்றாக இருக்கிறது. ஆனால் VFX காட்சிகளில் குறை இருப்பதாக கூறியுள்ளார். இதனால் போஸ்ட் ப்ரோடுக்ஷன் மற்றும் VFX பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கங்குவா படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் மிகப்பெரும் தொகையை கொடுத்து கைப்பற்றிவிட்டது. தற்போது படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் கங்குவா பட குழுவினர் நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு டீசரை வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். மேலும் விக்ரம் நடிப்பில் உருவான தங்கலான் படத்தின் இடைவேளையில் கங்குவா படத்தின் டீசரை இணைக்கவும் படக் குழுவினர் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. சுமார் 10 மொழிகளில் வெளியாகும் கங்குவா படம் மாபெரும் அளவில் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.