Celebrities who attended the opening ceremony of Ram Temple|ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள்
Connect with us

GALLERY

சூப்பர் ஸ்டார் முதல் டெண்டுல்கர் வரை.. அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள்.. இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்..!!

Published

on

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ஸ்ரீராமஜன்ம பூமியில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ராமர் கோவில் கட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியுள்ளார்.

அங்கு ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேக்ரா அறக்கட்டளை கட்டுமான பணிகளை விரைந்து செய்தது.

Advertisement

 

#image_title

அதன்படி 72 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோவில் வளாகத்தில் 2.7 ஏக்கரில் நாகரா கட்டுமான கலையில் 3 மாடிகள், 5 குவி மாடங்கள், கோபுரம் என 161 அடி உயரத்தில் பிரம்மாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டிருக்கிறது.

 

Advertisement

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றனர்.

ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் குழுவாக அமர்ந்திருந்தனர்.

Advertisement

#image_title

அதேபோல ஸ்டார் ரஜினி காந்த் ராமர் கோவில் திறப்பு நிகழ்ச்சிகள் பங்கேற்றார்.

மேலும் நடிகர்  தனுஷ், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, ராம்சரண் ஆகியோரும் திறப்பு விழாவில் பங்கேற்றனர்.

இந்நிலையில் காலை 11.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Advertisement

மேலும் அவருடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்திரபிரதேச ஆளுநர் ஆனந்தி பென் பட்டேல், முதல்வர் யோகி ஆதித்யாநாத் ஆகியோரும் வந்தனர்.

அவர்கள் கருவறைக்குள் அழைத்து செல்லப்பட்டனர். அங்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, விலை உயர்ந்த நகைகளை அணிந்திருந்த குழந்தை ராமர் காட்சி அளித்தார்.

Advertisement

கோவில் அர்ச்சகர்கள் வழிகாட்டுதல்படி பிரதமர் மோடி, ஆர் எஸ் எஸ் தலைவர், உத்தரபிரதேச ஆளுநர், முதல்வர் யோகி ஆகியோர் பூஜைகள் செய்துள்ளனர்.

#image_title

 

இதனையடுத்து வேத மந்திரங்கள் முழங்க பல்வேறு அர்ச்சனைகள் செய்து குழந்தை ராமருக்கு மலர்கள், பழங்கள் சமர்ப்பிர்க்கப்பட்டது.

Advertisement

பின்னர் பிரதமர் நரேந்திர மோடி குழந்தை ராமனுக்கு ஆரத்தி காண்பித்தார். பாலராமர் கண் திறந்து பக்தர்களுக்கு அருள் பாலித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement