GALLERY
மகனை ஸ்ட்ரெச்சரில் வைத்து தூக்கி செல்லும் விஜயகுமார்.. நடிகர் அருண் விஜய்க்கு என்ன ஆச்சு..? வைரலாகும் ஷாக்கிங் போட்டோஸ்..!!
முன்னணி நடிகர் ஆன அருண் விஜய், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 1995-ஆம் ஆண்டு முறை மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் அருண் விஜய் சினிமாவில் அறிமுகம் ஆனார்.
இந்நிலையில் லைக்கா நிறுவனம் தயாரித்து ஏ.எல் விஜய் இயக்கிய மிஷன் சாப்டர் 1 படத்தில் அருண் விஜய் நடித்துள்ளார்.
இந்த படம் ஜனவரி 12-ஆம் தேதி ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் எமி ஜாக்சன், நிமிஷா சாஜயன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்நிலையில் படத்தின் சண்டைக் காட்சியில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் இரண்டு மாதங்களாக அருண் விஜய் பெட் ரெஸ்டில் இருக்கிறாராம். அவர் இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
மேலும் தான் எலும்பு முறிவால் அனுபவித்த வலியை மிஷன் சாப்டர் 1 படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் அன்பு மறக்க செய்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
ரசிகர்களின் அன்பு மீண்டும் தன்னை வலிமையாக்கி ஆக்ஷனில் களமிறங்க செய்யும் என அருண் விஜய் பதிவிட்டுள்ளார்.
மிஷன் chapter 1 படத்தில் அருண் விஜயின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இதனையடுத்து அருண் விஜய் நடிப்பில் வணங்கான் படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
அருண் விஜய் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படத்தை பார்த்து அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
