GALLERY
விளையாட்டு போட்டிகளில் கலக்கும் பிரபல நடிகை.. யாருன்னு தெரியுமா..? இணையத்தில் வைரலான புகைப்படங்கள்..!!

பிரபல நடிகையான நிவேதா பெத்துராஜ் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான ஒரு நாள் கூத்து திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார்.
இவர் முன்னணி நடிகர்களான விஜய் ஆண்டனி, ஜெயம் ரவி, விஜய் சேதுபதி ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.
நிவேதா பெத்துராஜ் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாபாத்திரங்கள் அனைத்தும் மக்களின் கவனத்தை ஈர்த்தது.
மதுரை மாநகரில் பிறந்து துபாயில் வளர்ந்தவர் நிவேதா பெத்துராஜ். இவர் அரேபிய நாடுகளில் கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற அழகு போட்டியில் மிஸ் இந்திய பட்டத்தினை வென்றுள்ளார்.
ஒரு நாள் கூத்து திரைப்படத்தில் இடம்பெற்ற அடியே அழகே என்ற பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து கடந்த 2017-ஆம் ஆண்டு உதயநிதியின் பொதுவாக என் மனசு தங்கம் என்ற திரைப்படத்தில் நிவேதா பெத்துராஜ் நடித்தார்.
அதன்பிறகு கடந்த 2017-ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் மெண்டல் மதிலோ என்ற திரைப்படத்தில் நடித்தார்.
நிவேதா பெத்துராஜ் நடித்த திமிரு புடிச்சவன், டிக் டிக் டிக், ஒரு நாள் கூத்து ஆகிய வெற்றி படங்களில் நடித்துள்ளார். நிவேதாவுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகம்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நிவேதா பெத்துராஜ் இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் நிவேதா பெத்துராஜ் பேட்மிட்டன் சாம்பியன் கோப்பையை கையில் வைத்தவாறும், அந்த கோப்பைக்கு முத்தம் கொடுத்தவாறும் புகைப்படம் எடுத்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.