actress Urvashi family photos|நடிகை ஊர்வசி குடும்ப புகைப்படங்கள்
Connect with us

GALLERY

80’s நடிகை ஊர்வசியின் மகளா இது..? அழகில் அம்மாவையே மிஞ்சிடுவாங்க போலயே.. பலரும் பார்க்காத புகைப்படங்கள் இதோ..!!

Published

on

80-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஊர்வசி குழந்தை நட்சத்திரமாக ஏராளமான மலையாள படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் கே.பாக்யராஜ் இயக்கத்தில் உருவான முந்தானை முடிச்சு படத்தில் கதாநாயகியாக நடித்தார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Advertisement

முக்கியமாக நடிகை ஊர்வசி அபூர்வ சகோதரிகள், கொம்பேறி மூக்கன், ஓ மானே மானே, அன்பே ஓடிவா என அடுத்தடுத்த படங்களில் நடித்துள்ளார்.

உலகநாயகன் கமலுடன் மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், பஞ்சதந்திரம் மன்மதன்பு உள்ளிட்ட படங்களில் ஊர்வசி நடித்துள்ளார்.

Advertisement

காமெடி கலந்த கதாபாத்திரம் என்றாலே ஊர்வசி தான் ஞாபகம் வரும். இவர் ஆர்.ஜே பாலாஜியின் மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் ஆகிய படங்களில் காமெடி காட்சிகளில் எமோஷனல் கலந்து சிறப்பாக நடித்து மக்களின் மனதை கவர்ந்தார்.

கடந்த 2000- ஆம் ஆண்டு ஊர்வசி நடிகர் மனோஜ் கே.ஜெயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குஞ்சட்டா என்ற மகள் இருக்கிறார்.

Advertisement

இதனையடுத்து கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2008-ஆம் ஆண்டு கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.

இதனால் குஞ்சட்டா தனது தந்தையின் பராமரிப்பில் இருந்தார். அதன் பிறகு மனோஜ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

இதே போல ஊர்வசியும் தொழிலதிபரான சிவப்பிரசாத் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

ஊர்வசி சிவ பிரசாத் தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இத்தனை நாட்கள் தந்தையின் பராமரிப்பில் இருந்த குஞ்சட்டா தற்போது அம்மா ஊர்வசியை சந்தித்து வருகிறார்.

Advertisement

ஊர்வசி தனது மகன் மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

அதனை பார்த்த ரசிகர்கள் ஊர்வசி போலவே அவரது மகளும் அழகாக இருக்கிறாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in