அறிமுக இயக்குனரின் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்.. அதில் ஒரு ஸ்பெஷாலிட்டி இருக்காம்.. இந்த டைம் ஒர்க் அவுட் ஆகுமா..? - cinefeeds
Connect with us

LATEST NEWS

அறிமுக இயக்குனரின் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்.. அதில் ஒரு ஸ்பெஷாலிட்டி இருக்காம்.. இந்த டைம் ஒர்க் அவுட் ஆகுமா..?

Published

on

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தனது திரை பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு அட்டகத்தி, வடசென்னை, கனா ஆகிய திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான காக்கா முட்டை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஐஸ்வர்யா ராஜேஷ் பிரபலமானார். இதற்காக சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருது ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கிடைத்தது. இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பார்.

Advertisement

ஏற்கனவே ஐஸ்வர்யா ராஜேஷ் கருப்பர் நகரம், மோகன்தாஸ், தீயவர் குலைகள் நடுங்க உள்ளிட தமிழ் படங்களிலும் இரண்டு மலையாள படங்களிலும் கமிட் ஆகியுள்ளார். இந்த நிலையில் அறிமுக இயக்குனர் மனோ பாரதி இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் வளையம் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரியின் தயாரிப்பாளர் ஜி.டில்லிபாபு தயாரிக்க உள்ளார்.

கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக உருவாகும் வளையம் திரைப்படம் திரில்லர் மற்றும் ஆக்சன் ஜானரில் உருவாக உள்ளதாம். சில சமயங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கும் படங்கள் தோல்வியை சந்திக்கும். அப்படி இருக்க அறிமுக இயக்குனரை நம்பி ஐஸ்வர்யா நடிக்கும் படம் ஒர்க் அவுட் ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Continue Reading
Advertisement