LATEST NEWS
பிக் பாஸுக்கு பிறகு தாய்லாந்து சென்ற மாயா… ஆனா கூட இருப்பது பூர்ணிமா இல்ல.. அந்த பிரபல நடிகையா..? வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ..!!
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் மாயா கிருஷ்ணன் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் வீட்டிற்குள் மாயாவுக்கும் பூர்ணிமாவுக்கும் இடையே இருக்கும் உறவு அனைவரும் அறிந்ததே. இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.
பணப்பெட்டி டாஸ்க் பூர்ணிமா 16 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். கடைசியாக பிக் பாஸ் தமிழ் சீசன் 7 இறுதிப் போட்டியாளர்களாக விஷ்ணு விஜய், தினேஷ், மணி, அர்ச்சனா, மாயா ஆகியோர் இருந்தனர்.
பிக் பாஸ் தொடங்கியது முதல் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய மாயா கடைசி வரை பிக் பாஸ் வீட்டில் இருந்தார். அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். இதனால் இரண்டாம் இடத்தை மணியும், மூன்றாவது இடத்தை மாயாவும் பெற்றனர்.
பிக்பாஸுக்கு சென்று வந்த பிறகு ஒரு சில படங்களிலும் மாயா கமிட் ஆகியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் மாயா நடிகை அதிதி பாலாவுடன் தாய்லாந்து சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
View this post on Instagram