கேப்டன் மீது அளவற்ற அன்பு.. 80 தொழிலாளர்களை சொந்த செலவில் விமானத்தில் அழைத்து வந்த ரசிகர்.. Great sir நீங்க..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

கேப்டன் மீது அளவற்ற அன்பு.. 80 தொழிலாளர்களை சொந்த செலவில் விமானத்தில் அழைத்து வந்த ரசிகர்.. Great sir நீங்க..!!

Published

on

பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவால் கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்தனர். அரசு மரியாதையுடன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் இருக்கும் விஜயகாந்த் நினைவிடத்திற்கு தினமும் ஏராளமான பிரபலங்களும், பொதுமக்களும் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி செல்கின்றனர். மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் விஜயகாந்த். இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த மாயன் என்ற ரசிகர் ஒருவர் பில்டிங் காண்ட்டிராக்டராக இருக்கிறார்.

Advertisement

இவர் தன்னிடம் வேலை பார்க்கும் 80 தொழிலாளர்களை சொந்த செலவில் விமான மூலம் மதுரையில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். இதற்காக மாயன் 8 லட்ச ரூபாய் வரை செலவு செய்ததாக தெரிகிறது.

தனது சொந்த செலவில் தொழிலாளர்களை அழைத்து வந்த மாயனை பலரும் பாராட்டி வருகின்றனர். இன்றும் தமிழக உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Advertisement

 

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in