CINEMA
முதலமைச்சரான பின் முதல் முறை… நாளை மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜராகும் விஜய்…”விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்…பிறந்தநாளுக்கு முன் விஜய்க்கு கிடைக்கப்போகும் இன்ப அதிர்ச்சி…!
தமிழக திரையுலகில் டாப் நடிகராக வலம் வந்து, தற்போது ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியின் மூலம் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார் விஜய். இவர் அரசியல், ஆட்சி எனத் தனது புதிய பயணத்தில் பிஸியாக இருக்கும் வேளையில், கடந்த பிப்ரவரி மாதம் இவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தை நாடியது தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் விஜய்க்கும் ஒரு முன்னணி நடிகைக்கும் இடையே உள்ள நட்பு மற்றும் பொருளாதாரக் கட்டுப்பாடுகள் போன்ற காரணங்களைக் குறிப்பிட்டு சங்கீதா இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார்.
விஜய் தமிழக முதல்வரான பிறகு, முதன்முறையாக இந்த விவாகரத்து வழக்கு ஜூன் 15 (நாளை மறுநாள்) செங்கல்பட்டு 1-வது குடும்ப நல நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இதனால் ஒட்டுமொத்த அரசியல் மற்றும் திரை உலகினரின் பார்வையும் இந்த வழக்கின் மீது திரும்பியுள்ளது. இந்நிலையில், ஆங்கில ஊடகங்களில் வெளியாகியுள்ள ஒரு புதிய தகவல் ரசிகர்களுக்குப் பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது. அதாவது, விஜய் மற்றும் சங்கீதா ஆகிய இருவரும் தங்களின் குடும்பக் காரணங்களுக்காக, மீண்டும் இணைந்து வாழ்வது குறித்துத் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
இவர்கள் இருவரையும் மீண்டும் சேர்த்து வைப்பதற்கான சமரசப் பேச்சுவார்த்தையில், விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் முக்கியப் பாலமாக இருந்து இருதரப்பிடமும் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. வரும் ஜூன் 22-ஆம் தேதி விஜய் தனது பிறந்தநாளைக் கொண்டாட உள்ள நிலையில், இந்தச் சுமுகமான பேச்சுவார்த்தை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விஜய் அல்லது சங்கீதா தரப்பிலிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வரவில்லை என்றாலும், நாளை மறுநாள் நீதிமன்ற விசாரணையின் போது, இருவரும் சேர்ந்து வாழும் முடிவை நீதிமன்றத்தில் தெரிவிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவதால், இந்த வழக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
